உள்ளூர் செய்திகள்

தொழில்துறை பாதுகாப்புக்கு சென்னை ஐஐடி-ல் புதிய டிப்ளமோ பாடம் அறிமுகம்

சென்னை: தொழில்துறை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி செயல்முறை பாதுகாப்புக்கான ஆன்லைன் முதுகலை டிப்ளமோ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.வேதியியல், மெக்கானிக்கல், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் பி.இ/பி.டெக் பட்டம் பெற்றவர்கள் அல்லது வேதியியலில் முதுகலை பட்டத்துடன் 2 வருட அனுபவமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்த பாடம், சென்னை ஐஐடி-ன் சென்டர் பார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் மூலம் வழங்கப்படுகிறது.இந்தப் பாடத்தின் அவசியத்தை எடுத்துரைத்த ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்தியாவில் உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி துறைகளில் 240 பணியிட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தொழில்துறையில் பணிபுரியும் வல்லுநர்களுக்காகவே இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் அறிவையும் புரிதலையும் மேம்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நெகிழ்ச்சியான பணியிட சூழலை உருவாக்குவதில் பங்களிக்கும், என்றார்.விண்ணப்பக் கடைசி நாள்: மே 31, 2025நுழைவுத் தேர்வு தேதி: ஜூலை 13, 2025விண்ணப்ப முகவரி: https://code.iitm.ac.in/processsafety


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்