பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி : மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்த புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்க தலைவர் நாராயணசாமி அறிக்கை:அனைத்து படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட உள்ளது.இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை முடிக்க 16 நாட்கள் உள்ள நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., சிறப்பு அனுமதியை பெற்று கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.இல்லையெனில், ஏழை எளிய மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு கேள்வி குறியாகவிடும். மாணவர்கள் நலன் கருதி சிறப்பு அனுமதி பெற்று கலந்தாய்வு நடத்த கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.14ம் தேதி பொறியியல் படிப்புக்கான அனைத்து மாணவர் சேர்க்கையையும் முடிக்க வேண்டும். முதல்வர் நீட் அல்லாத அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, கவர்னர் அனுமதியுடன் அரசாணை வெளியிடப்பட உள்ளது.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 16 நாட்களே உள்ளதால், பொறியியல் மாணவர் சேர்க்கையை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, அதிக காலியிடங்கள் உருவாகி மாணவர்களை சேர்க்க முடியாத நிலை உருவாகும்.இதனால் ஏழை மாணவர்கள் பொறியியல் படிக்க முடியாத நிலை உருவாகும். எனவே, வரும் 14ம் தேதிக்கு பிறகும் மாணவர் சேர்க்கை நடத்த கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.