உள்ளூர் செய்திகள்

இந்திய கால்நடை மருத்துவ முறைகளை அறிய வந்திருக்கும் அமெரிக்க மாணவர்கள்

நாமக்கல்: கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பல்வேறு துறைகளில் பயிற்சி மேற்கொள்ள, அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மெரிலேண்ட் பல்கலையை சேர்ந்த, கால்நடை மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் இளங்கலை மாணவர்கள் பத்து பேர், பேராசிரியர்கள் இளங்குமரன், ரூபி தலைமையில், நாமக்கல் வந்துள்ளனர். அம்மாணவர்கள் ஏழு நாட்களாக பல்வேறு துறைகளில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தினமும் காலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கால்நடை மருத்துவம், அறுவை சிகிச்சை, இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்