உள்ளூர் செய்திகள்

தனி­யா­ருக்­கான அரசு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களிடையே ஆர்வமில்லை

ஆனால், தனியார் நிறு­வ­னங்­களில் உதி­ரிப்­ப­ணி­க­ளுக்கு ஆட்­களை தேர்வு செய்ய, மாவட்ட நிர்­வாகம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்­களில் இளை­ஞர்கள் ஆர்வம் காட்­டா­மலே உள்­ளனர். இதற்கு, வழங்­கப்­படும் வேலை­களில் குறைந்த ஊதியம் மற்றும் பணி நிரந்­த­ர­மின்மை தான் காரணம் என, கூறப்­ப­டு­கி­றது. ஸ்ரீபெ­ரும்­புதூர், இருங்­காட்­டுக்­கோட்டை, ஒர­கடம், மறை­ம­லை­நகர், சிறு­சேரி ஆகிய இடங்­களில் உள்ள சிப்காட் தொழில் பூங்­காக்­களில் இயங்கும் 545 தனியார் நிறு­வ­னங்­களில் துப்­பு­ரவு, காவலர், தோட்ட பராம­ரிப்பு, அலு­வ­லக உதவி போன்ற பணி­க­ளுக்கு 3.5 லட்சம் பணியிடங்கள் உள்­ளன. இவை, ஒப்­பந்த அடிப்­ப­டையில், பணியாளர்களை அழைத்து வரும் முக­வர்கள் மூலம் நிறப்பப் படு­கின்­றன. பணி­யாளர் பற்­றா­குறை பணி­யா­ளர்­களை அழைத்து வரும் முக­வர்கள், பெரும்­பாலும், பிற்­பட்ட மாநி­லங்­களில் மற்றும் மாவட்­டங்­களில் இருந்து ஆட்­களை அழைத்து வந்து பணி­ய­மர்த்­து­கின்­றன. ஆனால், சூழல் வேறு­பாடு, பணியில் பிடிப்பின்மை உள்­ளிட்ட கார­ணங்­களால், இவர்­களை தக்க வைத்துக்கொள்­வது மிகவும் சிர­ம­மான விஷ­ய­மாக உள்­ள­தாக கூறப்படுகி­றது. இதனால், ஏறத்­தாழ 10 ஆயிரம் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளன. இது குறித்து, தனியார் நிறு­வ­னங்கள், காஞ்­சி­புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரி­வித்­தன. அதை­ய­டுத்து, கடந்த ஆண்டு முதல் மாவட்ட நிர்­வாகம் வேலை­வாய்ப்பு முகாம்­களை நடத்தி வரு­கி­றது. இவற்றில், மாவட்ட வேலை வாய்ப்பு அலு­வ­லகம் மற்றும் ராஜிவ்­காந்தி தேசிய இளைஞர் மேம்­பாட்டு மையமும், தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு, பணி­யா­ளர்­களை தேர்வு செய்யும் பணியை மேற்­கொண்டு உள்­ளன. ஈ ஆடும் முகாம்கள் இந்த முகாம்­களில், "தேர்வு பெறு­ப­வர்­களில், பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு 4,500 ரூபாயும், தொழிற் பயிற்சி பெற்­றோ­ருக்கு 5,500 ரூபாயும், தொழிற் பயிற்­சியில் பட்­டயம் பெற்­றோ­ருக்கு 7,000 ரூபாயும் சம்­ப­ள­மாக நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது," என, அரசு வேலை­வாய்ப்­பக அதிகாரி ஒருவர் தெரி­வித்தார். சம்­பளம் இவ்­வ­ளவு இருந்தும், பணி­யி­டங்கள் காலி­யாக இருந்தும், கடந்த 2012ல் நடந்த முகாமில் 500 பேர் மட்­டுமே கலந்து கொண்­டனர். இதில், 235 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது. இந்த ஆண்டு, கடந்த மாதம் வரை, இரண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்­தப்­பட்டு உள்ளன. இவற்றில், மொத்தம் 1,217 பேர் மட்­டுமே கலந்து கொண்­டனர். அதில், 245 பேருக்கு வேலை கிடைத்து உள்­ளது. காரணம் என்ன? கடந்த சில ஆண்­டு­க­ளாக, இளை­ஞர்­களின் எதிர்­பார்ப்பு மாறி­யுள்­ளதால், வழங்­கப்­படும் சம்­பளம் போது­மா­ன­தாக இல்லை என்ற கருத்து அவர்கள் மத்­தியில் உள்­ளது. இது குறித்து, முகாமில் பங்­கேற்ற காஞ்­சி­புரம் வாலிபர் ஒருவர் கூறி­ய­தா­வது: "நான் இரண்டு முகாம்­களில் பங்­கேற்று உள்ளேன். ஒவ்­வொரு முகாமிலும், 15 க்கும் மேற்­பட்ட தனியார் நிறு­வ­னங்கள், ஆட்­களை தேர்வு செய்ய வரு­கின்­றன. தொழில் பழ­குனர் என்ற நிலை­யில்தான் ஆட்­களை தேர்வு செய்­கின்­றனர். இதனால், மிகவும் குறை­வான ஊதியத்தையே நிர்­ணயம் செய்­கின்­றனர். அனு­பவம் வாய்ந்­த­வர்­க­ளுக்கு, இங்கு வேலை வாய்ப்பு கிடைப்­ப­தில்லை. நிலை­யான பணியும் இருப்பதில்லை என்­பாதால், முகாமில் பங்­கேற்க ஆர்வம் இல்லை." இவ்வாறு, அவர் கூறினார் மேலும், இந்த முகாம்­களில், அளிக்­கப்­படும் வேலை வாய்ப்­புகள் தொழில் கற்­றலை ஏற்­ப­டுத்­தாத, யாரும் செய்யக் கூடிய உதிரி பணிகள் என்­பதால், இளை­ஞர்கள் இதில் ஆர்வம் காட்­டு­வ­தில்லை. இதில் மாவட்ட நிர்­வாகம் மற்றும் தனியார் நிறு­வ­னங்கள் கவனம் செலுத்தி, தொழில்­நுடப் கற்­றலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வேலை­க­ளுக்கும் முகாம்கள் மூலம் பணி­யா­ளர்­களை எடுத்தால், மாவட்­டத்தை சேர்ந்த, படித்த இளை­ஞர்கள் பயன் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்