கால்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி அணிகள் வெற்றி
வண்ணாரப்பேட்டை: கல்லுாரி அளவிலான, கால்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி அணிகள் வெற்றி பெற்றன. சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், கல்லுாரி அணிகள் பங்கேற்கும், கால்பந்து போட்டி, சென்னையில் நடந்து வருகிறது. அதில், சர் தியாகராயா கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டிகளில், டி.பி., ஜெயின் கல்லுாரி அணி 4-1 என்ற, கோல் கணக்கில், குருநானக் கல்லுாரி அணியை வென்றது. மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி அணி, 3-0 என்ற, கோல் கணக்கில், ஜெப்பியார் பொறியியல் கல்லுாரி அணியை தோற்கடித்தது. இந்துஸ்தான் பல்கலை மைதானத்திலும் போட்டிகள் நடந்தன. அதில், எஸ்.ஆர்.எம்., ப்ளூ அணியும், இந்துஸ்தான் அணியும் மோதிய ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமனில் முடிந்தது. இந்துஸ்தான் பல்கலை அணி, 3-0 என்ற, கோல் கணக்கில், நசரேத் கல்லுாரி அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 1-0 என்ற, கோல் கணக்கில், லயோலா அணியை தோற்கடித்தது.