உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு

ஈரோடு: ஈரோடு சி.என். கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி, நேற்று இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்புடன், போராட்டம் நடத்தினர். ஈரோடு சி.என். கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இதற்காக, கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டம் நடந்தது. அரசு கல்லூரியாக மாற்ற விரைவில் அறிவிப்பு வரும் என அ.தி.மு.க.,வினர் கூறிய உத்தரவாதத்தை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இன்று வரை, அரசு கல்லூரியாக அறிவிக்கப்படவில்லை. எனவே, தொடர் போராட்டத்தில், மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, இந்திய மாணவர் சங்கம் சார்பில், இரண்டாவது நாளாக, மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்