பந்தலூர் மாணவ மாநில உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்க தேர்வு
பந்தலூர்: பந்தலூர் பள்ளி மாணவி, மாநில அளவிலான உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் குன்னூர் எம்.ஆர்.சி. மைதானத்தில் நடந்தது. இதில் உயரம் தாண்டும் போட்டியில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீ 2ம் இடம் பிடித்துள்ளார். இவர் மாநில அளவிலான உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.