உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு கம்பம் மாணவர் தேர்வு

கம்பம்: மதுரையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் ராஜாதேஜஸ், "எளிய கண்ணோக்கி" என்ற அறிவியல் படைப்பினை கண்டுபிடித்து சமர்ப்பித்தார். இந்த படைப்பிற்காக ராஜாதேஜஸ்க்கு விருது கிடைத்துள்ளது. இவர், மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்