கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டம்
திண்டிவனம்: கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டிவனம் அரசு கல்லூரி மாணவ, மாணவியர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நூலகத்தில் போதுமான புத்தகங்கள் வைக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மற்றும் இளநிலை மாணவ, மாணவியர் 200 பேர் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ரேவதி, தாசில்தார் கோவிந்தன் மாணவ, மாணவிகளிடம் பேசினர். கலெக்டர் வர வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பின், மாலை டி.எஸ்.பி., சிலம்பரசன் சென்று மாணவர்களிடம் பேசினார். போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு சென்றனர்.