மீன் வளர்ப்பில் நீர்தரப் பண்புகள் மற்றும் மேலாண்மை குறித்த பயிற்சி
சென்னை: துாத்துக்குடி மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிப்., 4 முதல், 6ம் தேதி வரை, மீன் வளர்ப்பில் நீர்தரப் பண்புகள் மற்றும் மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த, மீன்வளக் கல்லுாரி செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வள பல்கலையின் அங்கமான, மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வளச் சூழலியல் துறை மூலமாக பயிற்சி நடக்கிறது. இதற்கு, ஐதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம், நிதி உதவி அளித்துள்ளது.பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வளச் சூழலியல் துறை, மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், துாத்துக்குடி - 628008 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, பதிவு செய்யலாம். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கப்படும்.