உள்ளூர் செய்திகள்

அவலநிலையில் அரசு பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானம்; அதிகாரிகள் மெத்தனம்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகளாகிறது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பயன்பாடின்றி அவல நிலையில் காணப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் பள்ளியும், பெண்கள் பள்ளியும் கடந்த 1968ம் ஆண்டு வரை ஒரே வளாகத்தில் தனியாக இயங்கின. நேபால் தெருவில் தற்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ள இடத்திற்கு அருகில் ஆண்கள் பள்ளிக்கு தானமாக இடம் வழங்கப்பட்டது. அரசு ஆண்கள் பள்ளிக்கு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு மைதானத்துடன் கச்சிராயபாளையம் சாலையில் ஒதுக்கி, மாற்றப்பட்டது. ஆனால் பெண்கள் பள்ளி மட்டும் அதே இடத்தில் இயங்கியது. மைதானம் சுற்று பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படிக்கும் இப்பெண்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானமே இல்லாமல் இருந்தது. மாணவிகளின் விளையாட்டு ஆர்வம் மற்றும் திறமைகளை வெளிபடுத்த அரசு ஆண்கள் பள்ளிக்கு தானமாக வழங்கிய இடத்தை இப்பள்ளிக்கு பெறுவதில் இரு பள்ளிகளுக்கிடையே 15 ஆண்டுகளாக பனிப்போர் நிலவியது. ஊர் பிரமுகர்கள் எடுத்த முயற்சியால் அப்போதைய சி.இ.ஓ., கண்ணப்பன் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். அதன்படி அரசு ஆண்கள் பள்ளிக்கு வழங்கிய இடம் பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டது. காட்சி பொருள் நீண்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த மைதானம் இதுவரை பயன்படுத்தாமல் காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. தற்போது 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். அதற்கேற்ப விளையாட்டு துறைக்கு தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவிகளிடையே விளையாட்டு கனவாக மட்டுமே உள்ளது. பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள்கு போதிய பயிற்சியின்றி, வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பரிசுகள் பெறும் மற்ற பள்ளி மாணவிகளை காணும் போது, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிகடையே பெரும் குமுறல்களையும், ஏக்கத்தை மட்டுமே காணமுடிகிறது. தான் படித்த பள்ளிக்கு பெருமை சேர்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் இன்றைக்கும் நீடித்து வருகிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டியும், அப்பகுதி மக்களின் கழிப்பிடமாகவும், பன்றிகளின் சங்கமமாகவே தற்போது விளங்கி வருகிறது. மாணவிகளின் விளையாட்டில் உள்ள ஆர்வம், தனித்திறமை முடங்கி கிடப்பதை கண்டு பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். கல்வி அறிவோடு, விளையாட்டும் அவசியம் என்பதை உணர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்கின்றனர். அதிருப்தி இப்பள்ளியில் இரண்டுக்கும் மேற்பட்ட விளையாட்டு ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில் மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிப்பதில்லை. அனைத்து விளையாட்டிற்கும் பயிற்சி அளிக்கும் வகையில் விஸ்தாரமாக இட வசதிகள் இருந்தும் காட்சி பொருளான மைதா னத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இருந்தும், பல ஆண்டுகளாக இந்த பள்ளியின் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பது மாணவிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்