பள்ளி தடகள போட்டியில் பென்டிங்க் மகளிர் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
வேப்பேரி: மாநில அளவிலான பள்ளி தடகள போட்டியில், பென்டிங்க் மகளிர் பள்ளி அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. கே.சி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மாநில அளவிலான பள்ளி இடையே, ஆறாவது, தடகள போட்டி, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. அதில், 62 பள்ளிகளில் இருந்து, 723 மாணவ, மாணவியர் மற்றும் 60 மன வளர்ச்சி குன்றிய மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தனிநபர் பிரிவு: சீனியர் ஆண்கள் பிரிவில், அர்ஷத் அகமத் (டி.பி.டி.ஆர்.,), சினியர் பெண்கள் பிரிவில், ரம்யா (வேலம்மாள்) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஜூனியர் பிரிவு: ஆண்களில், கெவின் கிரண்ராஜ் (டான்பாஸ்கோ), கிர்த்திகேசன் (அழகப்பா), பெண்களில் சுரேகா (பென்டிங்க்) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். சப்-ஜூனியரில் ஜாக்சன் பவுவியே (டான்பாஸ்கோ) ஜூலியேட் கிறிஸ்டினா (குட் செப்பேர்ட்), ஷரணி (பென்டிங்க்) ஆகியோர், தனி நபர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர். அதில், வேப்பேரி பென்டிங்க் மகளிர் மேல்நிலை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பஞ்சட்டி வேலம்மாள் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது.