உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலைகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்

காட்டாங்குளத்துார்: நிகர்நிலை பல்கலைகளுக்கு இடையிலான, ஆடவர் வாலிபால் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, சத்யபாமா அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், நிகர்நிலை பல்கலை அணிகளுக்கு இடையிலான, ஆடவர் வாலிபால் போட்டி, காட்டாங்குளத்துாரில் நடந்தது. ஆடவர் வாலிபால் இறுதி போட்டியில், நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியும், சத்யபாமா பல்கலை அணியும் மோதின. எஸ்.ஆர்.எம்., அணி, 25-19, 25-12, 25-16 என்ற செட் கணக்கில், சத்யபாமா பல்கலை அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில், வேல்ஸ் பல்கலை அணி, 25-18, 25-10 என்ற செட் கணக்கில், இந்துஸ்தான் பல்கலை அணியை வென்றது. முன்னதாக நடந்த, அரையிறுதி போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்துஸ்தான் அணியையும், சத்யபாமா பல்கலை அணி, வேல்ஸ் பல்கலையையும் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்