உள்ளூர் செய்திகள்

தர்மபுரி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை: மத்திய அரசு உறுதி!

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தேவையான வசதிகள் இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவை மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தன. இருப்பினும், மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இதை எதிர்த்து, மருத்துவக் கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கல்லூரியின் டீன் தனது மனுவில், நடப்பு 2009-10ம் ஆண்டு, 84 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கூடுதலாக 15 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்திய மருத்துவக் கவுன்சிலும், மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2009-10ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே தனிப்பட்ட முறையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார். இந்த விஷயத்தில் மருத்துவக் கவுன்சில் சிபாரிசின் பேரில் சேர்க்கை குறித்து உரிய உத்தரவு தர கோரிக்கை வைத்திருக்கிறேன். அமைச்சரின் நேரடி பரிசீலனையில் இருப்பதால்,சிறிது காலம் தேவை என்றார். இந்த தகவலை அடுத்து வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்