உள்ளூர் செய்திகள்

நீட் விசாரிப்பு குழு அமைப்பு : உயர் நீதிமன்றம் விசாரணை!

சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு நியமித்துள்ள குழு பற்றி விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் பெறப்பட்டதா என, கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனு:மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான, &'நீட்&' தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 10ல் பிறப்பிக்கப்பட்டது. தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த, இந்த சட்டம் வழிவகுக்கிறது.வீண்செலவுமருத்துவ ஆலோசனை கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கமிஷனும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ கமிஷன் முன், மருத்துவ கல்வி குறித்த எந்த பரிந்துரையையும் அளிக்கலாம். மருத்துவ ஆலோசனை கவுன்சில் வாயிலாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கருத்து தெரிவிக்கலாம். இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. சட்டப்படி இது அனுமதிக்கத்தக்கது அல்ல; இந்தக் குழு அமைப்பதால் வீண் செலவு தான் ஏற்படும். பல்வேறு ஆய்வுகள், நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாகவே, பொது நுழைவு தேர்வு வந்துள்ளது.நீட் தேர்வு நான்கு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள், தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீட்டை, அரசு வழங்கி உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நியமனம் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசிடம் விளக்கம்?மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, &'&'நீட் தேர்வு குறித்து 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கை, நீட் தேர்வின்படியே நடக்க வேண்டும். &'&'மாநில அரசு அமைத்த குழு, வீணான நடவடிக்கை. நீட் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது&'&' என்றார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, &'&'தேர்தல் அறிக்கையில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டுள்ளது&'&' என்றார். அப்போது நீதிபதிகள், &'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது; குழு அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா&' என, கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறினார்.தள்ளிவைப்புஅதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தும், அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுவின் நகலை, உடனடியாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும், மத்திய அரசும் தன் நிலையை தெரிவிக்கலாம் என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 5க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்