உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுக்கு தயாராக சிறப்பு வகுப்பு; மாணவ, மாணவியருக்கு அழைப்பு

திருப்பூர்: திருப்பூரில் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில், பங்கேற்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி மூலம், யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், படிக்க நவீன வசதிகளுடன் கூடிய நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இம்மையத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் கொண்ட நுாலக வசதி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உபயோகத்துக்காக இன்டர்நெட் வசதியுடன் கூடிய கணினி அறைகள், டிஜிட்டல் வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படித்து வரும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்கள் எதிர்காலத்தில் (நீட்) போன்ற பல்வேறு உயர்படிப்புகளுக்காக தயார் செய்யும் வகையில் ஏப்., 28ம் தேதி முதல் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளனர்.இந்த வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் http://thiranmigutiruppur.com என்னும் கூகுள் விண்ணப்பத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்து, சிறப்பு வகுப்புகளுக்காக மாநகராட்சியால் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, உரிய பதிவு செய்து நுழைவு தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இலவசமாக சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்