கனடாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்: திமுக பெருமிதம்
புதுடில்லி: இந்தியாவில் மட்டுமில்லாமல் கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொலை நோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும் என திமுக தெரிவித்துள்ளது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் சமூகவலைதளத்தில் கனடா பள்ளி குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம் என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள வெற்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி துவக்க பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.