உள்ளூர் செய்திகள்

பல்கலையில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்து பேராசிரியர்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன.இதில் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நாகர்கோவிலில் நடக்கிறது. மற்ற மூன்று மாவட்டங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி திருநெல்வேலி அபிசேகபட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் இதில் ஈடுபட்டனர்.விடைத்தாள் திருத்திய பிறகு மாணவர்களின் மதிப்பெண்ணையும் பேராசிரியர்களே பல்கலையின் ஆப்-ல் பார் கோடை ஸ்கேன் செய்து பதிவிட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டனர்.இத்தகைய பணியை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனத்துடன் பல்கலை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எனவே பேராசிரியர்கள் அதனை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் சந்திரசேகர் தற்போது கவர்னரின் மாநாட்டிற்கு ஊட்டி சென்றுள்ளார்.எனவே பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணியை மட்டும் மேற்கொண்டால் போதும் மதிப்பெண் பதிவேற்றும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்