பள்ளி மேலாண்மை தகவல் மைய தேர்வில் நெட் வசதி கட்
கடலுார் : கடலுாரில் பள்ளி மேலாண்மை தகவல் மைய ஆட்கள் தேர்வின்போது, இணையதள வசதி துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தில், பதிவு செய்வதற்காக ஆட்கள் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. இதற்காக விண்ணப்பித்திருந்த இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில், ஒரு சுற்றுக்கு 15 பேர் வீதம், மொத்தம் 10 சுற்றுகளாக தேர்வு நடந்தது. முதல் சுற்றில் 15 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதியபோது, திடீரென இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. இதனால், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வர்கள் பாதியில் வெளியில் வந்தனர். இதையடுத்து, தேர்வு மைய அலுவலர்கள், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் 15 பேருக்கு மறுத்தேர்வு நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.