உள்ளூர் செய்திகள்

மதியத்துக்கு மேல் பள்ளிகள் விடுமுறை; பெற்றோருக்கு இரட்டை அலைச்சல்

கோவை : மழை காரணமாக மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என, மாவட்ட நிர்வாகம் நேற்று காலை அறிவித்த நிலையில் மாணவர்கள், பெற்றோர் பலர் தகவல்கள் தெரியாததால் அவதிக்குள்ளாகினர்.மழை காரணமாக அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் நேற்று மதியம் வரை மட்டும் இயங்கும் என, மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.காலை, 6:30 மணிக்கு அறிவிப்பு வெளியான நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.,வாயிலாகவும், போன் அழைப்பு வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலும், இதற்கு வாய்ப்பு இல்லாததால் மாணவர்கள், பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.மாணவர்கள், பெற்றோர் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு, தாமதமாகவே தெரியவந்தது. செய்தி சேனல்கள், சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் குழந்தைகளை தயார் செய்தல், காலை, மதிய உணவு தயாரிப்பு உள்ளிட்ட பரபரப்பான பணிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை.சில பள்ளிகளில் இருந்து, போனில் அழைத்து தகவல் அளித்துள்ளனர். அவசர, அவசரமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றோம். லீவு என தெரிந்து, மீண்டும் அழைத்து வந்தோம் என்றனர்.மழை நிலவரத்துக்கு ஏற்ப, அந்தந்த மாவட்ட நிர்வாகமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவு எடுக்கலாம் என, அரசு தெரிவித்துள்ளது. ஆகவே, இறுதிநேர அலைச்சலை தவிர்க்க, முன்னறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது மாணவர், பெற்றோரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்