முதல்வர் திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி
கரூர்: முதல்வர் திறனாய்வு தேர்வில், வெள்ளியணை அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களின் திறனாய்வு தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து, 3,756 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை மாதம், 1,000 ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டுக்கு, 10 மாதங்கள் வழங்கப்படும். தேர்வில் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் லாவண்யா, மஞ்சுளா பேச்சியம்மாள் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியை அமலிடெய்சி, ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.