உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஓமலுார்: பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்துக்கு, புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க, (பூடோ) புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் அலுவலராக நுாலக அறிவியல் துறை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். தலைவர் பதவிக்கு பல்கலை நுாலகர் ஜெயப்பிரகாஷ்,துணைத் தலைவர் பதவிக்கு ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சிந்து, பொதுச் செயலாளர் பதவிக்கு உளவியல்துறை இணை பேராசிரியர் நித்யானந்தன், பொருளாளர் பதவிக்கு கணினி அறிவியல் துறை பேராசிரியர் லாரன்ஸ் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், ஹேமா, கல்யாணசுந்தர் ஆகியோர் போட்டியிட்டனர். வேறு யாரும் போட்டியிடவில்லை. இதனால் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்