உள்ளூர் செய்திகள்

துவக்கப்பள்ளிக்கு வெளிச்சம் கிடைத்தது! நிரந்தர தீர்வு காண கோரிக்கை

வால்பாறை: தினமலர் செய்தி எதிரொலியாக, அரசு துவக்கப்பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே முதல்பிரிவு. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 13 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் வாயிலாகவும், எண்ணும், எழுத்தும் வாயிலாகவும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.இந்நிலையில், பள்ளிக்கு மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டதால், மாணவர்கள் இருட்டில் அமர்ந்து படிக்கின்றனர். இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பள்ளிக்கு அருகில் உள்ள சர்சிலிருந்து தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு தொடக்கப்பள்ளிக்கு, பல ஆண்டுகளாக அருகில் உள்ள ரேஷன் கடை மின் இணைப்பு வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், ரேஷன் கடை இடிக்கப்பட்டு கன்டெய்னர் கடை கட்டப்படுவதால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் சப்ளை இன்றி, மாணவர்கள் இருளில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தினமலர் செய்தி எதிரொலியாக, பள்ளிக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பள்ளிக்கு தனி மின் இணைப்பு வழங்க வேண்டும். வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள, இந்த பள்ளியின் பாதுகாப்பு கருதி நகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்