உள்ளூர் செய்திகள்

கல்லுாரி விடுதியில் அடிதடி ரேஸ்கோர்ஸ் போலீஸ் வழக்கு

கோவை : கோவை அரசு கலை கல்லுாரி மாணவர் விடுதியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை அரசு கலை கல்லுாரி மாணவர் விடுதி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, விடுதி மாணவர்கள் சிலர், போதையில் தகராறில் ஈடுபட்டனர். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பாக பிரிந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இருவருக்கு தலையில் அடிபட்டது.தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், விடுதிக்கு சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தினர். காயமடைந்த இருவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்