உள்ளூர் செய்திகள்

உயர்கல்வியில் எந்தெந்த பாடங்களுக்கு மவுசு; கல்வியாளர் அஸ்வின் விளக்கம்

கோவை: வரும் கல்வியாண்டில் கலை, அறிவியல் பிரிவில் பொருளாதாரப் பாடத்துக்கும், இன்ஜினியரிங் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கும் மவுசு இருக்கும் என கல்வியாளர் அஸ்வின் கூறினார்.மே, 9ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என யோசித்து வருகின்றனர்.கல்வியாளர் அஸ்வின் கூறியதாவது:கலை, அறிவியலில் பி.காம்.,க்கு, எப்போதும் வரவேற்பு இருக்கும். பொருளாதாரப் பாடத்தை படித்தால், நல்ல எதிர்காலம் இருக்கும். இன்ஜினியரிங்கில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்துக்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது.எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் படிப்புக்கு, நடப்பாண்டு மாணவர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.தமிழகத்தில், 40 கல்லுாரிகள் மட்டுமே, வேலைவாய்ப்பு, எதிர்காலத்துக்கு தேவையான திறன்களை வழங்குகின்றன. தேர்வு முடிவுகள் வரும் முன்னரே, நேரில் சென்று கல்லுாரிகள் குறித்த தகவல்களை அறிய வேண்டும். தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும். பல சர்வதேச நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே, மாணவர்கள் நன்றாக படித்தால் போதும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்