உள்ளூர் செய்திகள்

தமிழ்க் கல்விக் கழக பள்ளி ஜப்தி; மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

புதுடில்லி: வரி செலுத்தாததால், டில்லி தமிழ்க் கல்விக் கழக பள்ளியின் சொத்துக்களை, மாநகராட்சி ஜப்தி செய்தது.டில்லி தமிழ்க் கல்விக் கழகம் டில்லியின் பல பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது.சாது வாஸ்வானி மார்க்கில் உள்ள பள்ளிக் கட்டடத்துக்கு சொத்து வரி நிலுவயில் இருந்தது. இது தொடர்பாக மாநகாராட்சி சார்பில், பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், வரி செலுத்தப்படவில்லை.இதையடுத்து, மத்திய டில்லி பூசா சாலையில் உள்ள டில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின், சீனியர் செகண்டரி பள்ளிக்கு, ராஜேந்தர் நகர் போலீசாருடன் மாநகராட்சி வரி வசூல் பிரிவு அதிகாரிகள் வந்தனர். மாணவர்களிடன் கல்வி பாதிக்காமல் இருக்க, முதல்வர் அலுவலகம் மற்றும் சில அறைகளை மட்டும் ஜப்தி செய்து, பள்ளி நிர்வாகிகளிடம் அதற்கான நோட்டீஸை வழங்கினர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் பேசிய போது, பல முறை நோட்டீஸ் அனுப்பியும், டில்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகள் அதைக் கண்டுகொள்லவில்லை. எனவே, டில்லி மாநகராட்சி சட்டம் - 1957ன் பிரிவு 156 - ஏன் கீழ் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்