உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் யுபிஎஸ்சி பயிற்சி திட்டம்- சேது

சென்னை: பிரஜாஹிதா அறக்கட்டளை மற்றும் ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த யுபிஎஸ்சி சிஎஸ்சி பயிற்சி திட்டமான சேதுவை அறிமுகப்படுத்தின.ஆகஸ்ட் 15 முதல் தொடங்கும் இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதும் இருந்து 30 மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 400 பேருக்கு உதவித்தொகை வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திட்டத்தில், பாடக்கட்டணம், உதவி தொழில்நுட்பம், கற்றல் உபகரணங்கள், அணுகுமுறைப் பாடத்திட்டம், யுபிஎஸ்சி அதிகாரிகளின் வழிகாட்டல், கூடுதல் நேரம், குரல் மற்றும் ஸ்கிரீன்-ரீடர் இணக்கமான இ-லர்னிங் வசதி ஆகியவை வழங்கப்படும்.ஷங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் லவஷ்ணவி கூறுகையில், எந்த குறையும் தகுதியான தேர்வர்களை பின்தள்ளக்கூடாது என்பதே எங்கள் நோக்கம், என்றார்.உதவித்தொகை தேர்வு ஆகஸ்ட் 30-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும். தொடர்புக்கு: setu@prajaahita.org, info@shankariasacademy.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்