உள்ளூர் செய்திகள்

ஜிப்மர் கிராம சுகாதார மையத்திற்கு தேசிய தரநிலை சான்றிதழ்

சென்னை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கீழ் செயல்படும் ராமநாதபுரம் கிராம சுகாதார மையம், தேசிய தரநிலை சான்றிதழைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் நடந்த மதிப்பீட்டில் இந்த மையம் 91.05 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.இதனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த சான்றிதழைப் பெறும் முதலாவது சுகாதார மையமாக இது அமைந்துள்ளது. இந்த மையம் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், தூத்திப்பேட்டை, பிள்ளையார்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் 11,200க்கும் மேற்பட்ட மக்களுக்கு 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி கூறுகையில், “இந்த அங்கீகாரம் ஜிப்மருக்கு பெருமை. இது தரமான மற்றும் புதுமையான சுகாதார சேவைகளுக்கான எங்களின் முயற்சியை வெளிப்படுத்துகிறது” என்றார்.மேலும், குருசுகுப்பம் நகர்ப்புற சுகாதார மையமும் சுமார் 9,000 மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த இரு மையங்களும் யோகா வகுப்புகள், தொலைதூர ஆலோசனை சேவைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்