உள்ளூர் செய்திகள்

கொரகா சமூகத்தின் முதல் பெண் டாக்டர் சினேகா

உடுப்பி: தென்மாநிலத்தில் குறிப்பாக கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கேரளாவின் காசர்கோடில் கொரகா எனும் பழங்குடி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். வனப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, கூடை முனைவது இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது.இச்சமூகத்தில் பெண்களை படிக்க வைப்பது அரிதாகவே உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி.,யை கொரகா சமூகத்தின் ஒரு பெண் முடித்து விட்டாலே அதுவே அதிசயமாக பார்க்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கும் போது, கொரகா சமூகத்தில் இருந்து முதல்முறையாக பெண் ஒருவர் டாக்டராகி சாதனை படைத்து உள்ளார்.உடுப்பியின் குந்தாபூர் தாலுகா உல்துாரில் வசிக்கும் கொரகா சமூகத்தின் கணேஷ் - ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் சினேகா. டில்லி பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லுாரியில் எம்.டி., பட்டம் பெற்று கொரகா சமூகத்திற்கு புகழ் சேர்த்து உள்ளார்.இதுகுறித்து சினேகா கூறியதாவது:கொரகா சமூகத்தில் பெண்களை அதிகம் வைப்பது அரிதாகவே உள்ளது. ஆனால் எனது தந்தை கணேஷுக்கு, பெண் குழந்தைகளை அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. இதற்காக விழிப்புணர்வில் அவர் ஈடுபடுகிறார். எனது தாய் ஜெயஸ்ரீ ஆசிரியையாக இருப்பதால், அவரும் கொரகா சமூக பெண்களுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.சிறுவயதில் இருந்தே எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால், ஆலுவா கல்லுாரியில் இலவசமாக பி.யு.சி., படிக்க முடிந்தது. இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் ஆலுவா கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன் ஆலுவா.பி.யு.சி.,யில் 96 சதவீத மதிப்பெண் பெற்ற பின், அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது. ஆனாலும் எனது பெற்றோர் நீண்ட துாரத்திற்கு அனுப்பி என்னை படிக்க வைக்கவில்லை. மங்களூரு ஏ.ஜே., மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர்.அங்கு எம்.பி.பி.எஸ்., படித்த பின், தற்போது டில்லியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லுாரியில் எம்.டி., முடித்து விட்டு மருத்துவ சேவைக்கு நுழைந்து உள்ளேன். எனது சகோதரி சாக் ஷியும் தற்போது குஜராத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் படிக்கிறார்.கொரகா சமூகத்தின் முதல் பெண் டாக்டர் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை போன்று பல பெண்கள் சாதிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்