பாரதியார், தைவான் கடல்சார் பல்கலை இணைந்து ஆராய்ச்சி நடத்த உடன்பாடு
கோவை: பாரதியார் பல்கலைக்கழகமும், தைவான் நாட்டின் கடல்சார் பல்கலைக்கழகமும் இணைந்து இரு முக்கிய துறைகளில் ஆராய்ச்சி நடத்த தீர்மானித்துள்ளன.விலங்கியல் துறை பேராசிரியர் ராமசுப்பிரமணியன், தைவான் கடல்சார் பல்கலை பேராசிரியர் ஜியாங் ஷியோவாங் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நன்னீர் மீன் வளர்த்தல், மீன் இனப்பெருக்கத்தை அதிகரித்து லாபகரமான மீன் உற்பத்தியை பெருக்குதல், மீன் வளர்ப்பு மற்றும் உயிர் உணவு வளர்த்தல் தொடர்பான ஆலோசனைகளையும் பயிற்சியையும் வழங்க முடியும்.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கோவையில் கையெழுத்தானது. உயர்கல்வி துறை செயலாளர் சங்கர், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் துர்கா சங்கர், பதிவாளர் ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.