உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பஸ் கூடுதலாக இயக்க எம்.டி.சி., முடிவு

சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளை, தேவைக்கேற்ப கூடுதலாக இயக்க மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தற்போது 686 வழித்தடங்களில், 3,500 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில், பள்ளி மாணவர்களுக்கு என 25 சிறப்பு பேருந்துகளும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு என 180 பேருந்துகளும், மகளிருக்கான பெண் ஓட்டுநர், நடத்துநருடன் கூடிய 12 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பள்ளிகள் திறந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகளையும், மகளிருக்கான சிறப்பு பேருந்துகளையும் எவ்வித பாதிப்புமின்றி இயக்கி வருகிறோம்.சில வழித்தடங்களில், பேருந்துகள் வருவதில் சிறிது கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக, அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தேவையான வழித்தடங்களில், கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எவ்வளவு பேருந்துகள் என்பது, வழித்தடங்களை இறுதி செய்த பின் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்