உள்ளூர் செய்திகள்

உலக இருதய தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

சேலம்: விநாயகா மிஷனின், விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறைகளின் சார்பில், உலக இருதய தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாட்டு விரிவுரை நிகழ்ச்சி, பல்கலை கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது.கல்லுாரி டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.இ. சுகாதார பராமரிப்பு நிறுவன பயன்பாட்டு நிபுணர் முகமது மாஸ், அபாட் பிரைவேட் லிமிடெட் நிறுவன பிரிவு மேலாளர் சூர்யா ஆகியோர், இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை சார்ந்த கருவிகளின் பயன்பாடு குறித்து, மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நடைமுறை அறிவு மற்றும் திறன்களை விளக்கினர். மேலும் மாணவர்களுக்கு முக ஓவியம் வரைதல், இசை சிகிச்சை சார்ந்த போட்டி மற்றும் மாதிரி வடிவமைத்தல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி இருதய சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் சுஷ்மிதா மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு பொறுப்பாளர் ராகுல் மற்றும் உதவி பேராசிரியர்கள் சிவரஞ்சனி, மெர்லின், விஷ்ணுபிரியா, கவிதா மற்றும் ஆயிஷா, விஷ்ணு பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்