தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
விக்கிரவாண்டி: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்தது.போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 பேர் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டிக்கு, தலைமை ஆசிரியை எழிலரசி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள் சுப்ரமணி முன்னிலை வகித்தார்.போட்டியில் 8ம் வகுப்பு மாணவிகள் மோனிஷா, ரக் ஷிமா ஆகியோர் முதலிடமும், 7ம் வகுப்பு மாணவிகள் கிருஷ்கா, பிரித்திகா இரண்டாமிடமும் பிடித்தனர். இவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு தொரவி பி.கே.எஸ்., பவுண்டேஷன் நிறுவனர் சுப்ரமணி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் ராஜேந்திரன், மாணவர்கள் பங்கேற்றனர்.