பின்தங்கிய பகுதியில் கட்டணமில்லா கல்வி கல்லுாரி அலுவலர்கள் வலியுறுத்தல்
மதுரை: பின்தங்கிய பகுதியில் கட்டணமில்லா உயர்கல்வி வழங்க வேண்டும் என, பொன்விழா மண்டல மாநாட்டில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லுாரி அலுவலர்கள் வலியுறுத்தினர்.மதுரையில் இச்சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா மண்டல மாநாடு தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாபு முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முனியசாமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக வி.சி.க., தலைவர் திருமாவளவன், மண்டலச் செயலாளர் மனோகரன், இணைப்பொதுச் செயலாளர் ஜெயகண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மண்டல இணைச்செயலாளர் சண்முகபிரியா, மாரியம்மாள், ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பின்தங்கிய பகுதியில் கட்டணமில்லா உயர்கல்வி வழங்கிட வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் கல்லுாரிகளை பல்கலையாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்., பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் வீரவேல்பாண்டி நன்றி கூறினார்.