உள்ளூர் செய்திகள்

சிட்டி சென்டர்களாக மாறும் ரயில் நிலையங்கள்: கவர்னர் ரவி

சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, 553 ரயில் நிலையங்களை, 19,000 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, காணொளி வாயிலாக பிரதமர்மோடி அடிக்கல் நாட்டினார். இதில், தெற்கு ரயில்வேயில், 44 ரயில் நிலையங்கள் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.அதையொட்டி, சென்னை பரங்கிமலையில் நடந்த விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:அனைத்து மாநிலங்களும் முன்னேற்றம் அடையும் வகையில், மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையங்களில் பல ஆண்டுகளாக, குறைந்த அளவிலான அடிப்படை வசதிகளே இருந்தன. பயணியர் மட்டுமே அவற்றை பயன்படுத்தி வந்தனர்.தற்போது, இந்த நிலை மாறி உள்ளது. ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகின்றன. புதிய ரயில் நிலையங்கள், சிட்டி சென்டர் போல மாறி வருகின்றன.ரயில் நிலையங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன், ஷாப்பிங் கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் பயணியர் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பொதுமக்களும் வந்து செல்லும் இடமாக மாறி உள்ளது.இதுபோன்ற திட்டங்களால், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உலக நாடுகள் தற்போது இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி, ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன. உலக பொருளாதார வளர்ச்சியில், ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். உலக நாடுகளை ஈர்க்கும் நாடாக, புதிய இந்தியா மாறியுள்ளது.சாலை போக்குவரத்து, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், நாட்டு மக்களுக்கான அடிப்படை தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது. உள்கட்டமைப்பு பணிக்காக, 10 லட்சம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது.அடிப்படை வசதிகளை அரசு வழங்கினால், மக்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்வர் என்பதால், அனைத்து அடிப்படை தேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதிக அளவில், &'டிஜிட்டல்&' பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நாடாக இன்று இந்தியா உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவில் துவங்கப்பட்டு வருகின்றன.வரி செலுத்தும் மக்கள் எண்ணிக்கை, 2 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.2047ல் வளர்ந்த இந்தியா, வளர்ந்த ரயில்வே என்ற தலைப்பில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, கவர்னர் ரவி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், லெப்டினட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், அனிதா பால்துரை உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்