உள்ளூர் செய்திகள்

பள்ளிகள் அருகே சாக்லேட் விற்பனை; ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: போதைப் பொருட்களின் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் அருகே சாக்லேட் விற்பனையை கண்காணித்து, போலீசுக்கு தகவல் அளிக்கும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுதும் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரிகள், பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அருகே இயங்கும் பெட்டிக்கடைகள், பேக்கரிகள், பழச்சாறு கடைகள், தேநீர் கடைகள் என, எல்லா விதமான கடைகளிலும், சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகிறதா என, கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு சந்தேகப்படும்படியாகவும், ஏதாவது ஒரு,டுபாக்கூர் நிறுவன பெயரிலும், பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட், பிஸ்கட் போன்றவை விற்கப்பட்டால், அதுகுறித்து ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் போலீசுக்கு தகவல் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்