உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் புத்தகம்

விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி நீட் பயிற்சி மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பீமநாயக்கன்தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல், வினோத், சதீஷ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், சரஸ்வதி நீட் பயிற்சி மைய முதல்வர் நாகராஜன் நீட் புத்தகத்தை வழங்கினர். ஆசாத், மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிகழ்ச்சியில், முகாம் ஒருங்கிணைப்பாளர் காங்கேயன், பாக்கியராஜ், செயலாளர் அன்பழகன், ரோட்டரி நிர்வாகிகள் ராமநாதன், பாலகுருநாதன், சரவணகுமார், நம்மாழ்வார், கந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சுரேஷ்குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்