உள்ளூர் செய்திகள்

தமிழ் வளர்த்த முருக பக்தர்கள் ஆன்மிக நுால் வெளியீடு

திருப்பூர்: திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில், தமிழ் வளர்த்த முருக பக்தர்கள் எனும் நுால் வெளியீட்டு விழா அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பணிக் குழுத் தலைவர் சின்னுகவுண்டர் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் சரவண சுப்ரமணியன் வரவேற்றார். அறக்கட்டளை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புத்தகங்களை சின்னுகவுண்டர் வெளியிட, வித்யா மந்திர் பள்ளி தாளாளர் ஆடிட்டர் விட்டல்ராஜன், மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமையாளர் சரவண பிரசாத், வளம் ரவி, ராதிகா, சக்தீஸ்வரன், சுப்ரமணியன், லட்சுமி பிரியா, திலீப்குமார், விக்னேஷ் ஆகியோர் பெற்று கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சைவ சித்தாந்த கழகத்தின் சமூக ஊடகபிரிவு மாநில பொறுப்பாளர் முருகானந்தம் பங்கேற்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்