கோவையில் ரஷ்ய கல்வி கண்காட்சி மருத்துவ துறையில் வாய்ப்புகள்
கோவை: ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையம் சார்பில், 2024- -25ம் கல்வி ஆண்டுக்கான அனைத்திந்திய ரஷ்ய கல்வி கண்காட்சி, கோவை தி கிரேண்ட் ரீஜியன்ட் ஹோட்டலில் நடந்தது.சென்னை, சேலம், மதுரை, திருச்சியைத் தொடர்ந்து கோவையில் நடந்த இக்கல்வி கண்காட்சியில், ரஷ்யாவை சேர்ந்த கஜான், வோல்காகிரேடு, மெபி மருத்துவ பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், டீன்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு, மருத்துவத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசினர்.கடந்த கல்வியாண்டில் நடந்த ரஷ்ய கல்வி கண்காட்சியில் இந்திய மாணவர்களுக்கு, 5,000 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில், 8,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் முதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்ன படிக்கலாம், கல்விக் கட்டணம், பாடங்கள், உதவித்தொகை, நாட்டின் காலநிலை, மருத்துவ பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.கூடுதல் தகவல்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இக்கண்காட்சியில், திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.