சாதி சான்றிதழ் பெற மாணவர்கள் அவதி; சாமிநாதன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: மாணவர்கள் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை பெறுவதற்கு அவதிப்படுகின்றனர் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தைவிட, கூடுதலான கட்டணத்தை பல தனியார் பள்ளிகளில் வசூல் செய்கின்றனர். கல்வித்துறை ஆண்டுதோறும், தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.மாணவர்கள் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை பெறுவதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஒருவர் 10ம் வகுப்பில் சாதி சான்றிதழ் எடுத்தால், பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் சாதி சான்றிதழ் கேட்பது தவறான உதாரணம்.இரு ஆண்டுகளில் ஒருவருடைய சாதி எப்படி மாறும் என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் சாதி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.