ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்
கோவை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி பள்ளிகளில் இடமிருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துளளது.மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் வரை இடம் வழங்கப்படுகிறது.ஆனால் தமிழக தனியார் பள்ளிகளில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் வரை உள்ள மாணவர்களை மட்டுமே சேர்த்து கொள்கின்றனர். இதனால் பள்ளிகளில் இடம் இருந்தும், ஏழை மாணவர்களால் சேர முடியவில்லை.பள்ளிகளில் இடமிருந்தால், ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்து, மாணவர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து, இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடக்கும் முன்பே நேரடியாக சென்று வலியுறுத்தி இருக்கிறோம்.மாவட்ட கலெக்டரிடம் பெற்றோர்களின் புகார் மனுவை இணைத்து, கோரிக்கை வைத்து இருக்கிறோம்.பெற்றோர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் ஏழை மாணவர்கள், கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.