உள்ளூர் செய்திகள்

இரண்டாம் பருவ பாட புத்தகம் வழங்க தயார்

ஈரோடு: தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நேற்று துவங்கியது. வரும், 27ல் முடிந்து, அக்., 3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.இதையடுத்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புத்தகங்கள், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்