ஈங்கூர் யுனிக் அகாடமி பள்ளியில் ராணுவ சாதனையாளர் கவுரவிப்பு
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில், இந்திய ராணுவத்தின் மேன்மையை பெருமைப்படுத்தும் விதமாக, ராணுவ சாதனையாளர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி முன்னாள் மாணவரும், 1971ல் பீரங்கி படை பிரிவில், இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று, சேனா பதக்கம் பெற்றவருமான சதுர்வேதி, அவர் மனைவி மிருதுளா, இந்திய விமானப்படை வீரரும், கொங்கன் ரயில்வே அமைப்பின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான பாலகிருஷ்ணன் மற்றும் பிரிகேடியர் மருத்துவர் ரவிவர்மன் ஆகியோர், தங்கள் பணி அனுபவங்களை, மாணவ-மாணவியருடன் பகிர்ந்து கொண்டனர். பள்ளி இயக்குனர் உமையவள்ளி இளங்கோ, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.முன்னதாக பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஜெயேஷ் வர்தன், கிருத்திகாதேவி மற்றும் பிளஸ் ௧ மாணவி தாரிகா மணிகண்டன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.