உள்ளூர் செய்திகள்

துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பி.இ.க்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொது தேர்வில் தோல்வியடைந்தோருக்காக நடத்தப்பட்ட உடனடித் தேர்வின் முடிவுகள், கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் 12ம் தேதி நடக்கும் பி.இ., துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி (எஸ்.சி./எஸ்.சி.எ./எஸ்.டி. மாணவர்கள் அவர்களது ஜாதி சான்றிதழை காண்பித்து ரூ.250 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்) நேரில் வந்து மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பம், சென்னை அண்ணா பல்கலையில் மட்டும், இன்று முதல் வரும் 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, 5ம் தேதி கடைசி நாள். பொது கவுன்சிலிங் முடிந்தபின், காலியாக உள்ள இடங்களை, 12ம் தேதி நடக்கும் துணை கவுன்சிலிங்கில், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்