மருத்துவ கலந்தாய்வில் ஓ.சி., பி.சி. இடங்கள் நிரம்பின
மொத்தம் உள்ள 913 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு வரை 624 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். மீதமுள்ள 289 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமையன்று 25 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். தற்போது மீதமுள்ள 28 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 8 மாணவர்கள் சேர்க்கை கடிதம் பெற்றனர். இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் 27 பேர், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் இடம் கிடைத்தும், கல்லூரியை தேர்வு செய்யாமல் திரும்பிச் சென்றுவிட்டனர்.