குறுகிய கால பயிற்சி பெற மாணவர்களுக்கு அழைப்பு
மத்திய, மாநில அரசும் சேர்ந்து நடத்தும் குறுகிய கால பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு ஐ.டி.ஐ., முதல்வர் மஞ்சுளாதேவி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாநில, மத்திய அரசு சேர்ந்து நடத்தும் குறுகிய கால பயிற்சி இம்மாதம் 16ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி தினமும் மாலை 3 மணி நேரம் அல்லது பயிற்சி பெறுபவர்களின் தேவை அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்படும். இப்பயிற்சி தினம் 3 மணி நேரம் வீதம் 120 மணி நேரம் வரை மட்டுமே ஆகும். இப்பயிற்சி முற்றிலும் இலவமாகும். இப்பயிற்சி முடிவில் மத்திய அரசால் வழங்கப்படும் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி குறைந்தபட்ச கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது பூர்த்தி அடைந்த வயது உச்சவரம்பற்ற வகையில் மாணவர்கள் சேரலாம். பயிற்சியில் பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் பள்ளி படிப்பை முடித்தவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். விபரங்களுக்கு ஐ.டி.ஐ., அலுவலகம், 04328-290590 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.