உள்ளூர் செய்திகள்

கிராமப்புற மாணவர்களுக்காக உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு வராமல், கிராமங்களிலேயே மேல்நிலைகல்வி பெறும் வகையில், இந்த ஆண்டு உயர்நிலை பள்ளிகளாக உள்ள 100 பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியர் உட்பட ஆறு பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது தரம் உயரும் பள்ளிகளில் 10 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதில், தமிழ் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்படி, 100 பள்ளிகளுக்கு ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்