ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி
மதுரை: செப்.18ல் நடக்க உள்ள, ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தற்போது 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகக் கூடாது. வருமானச் சான்று அளிக்க வேண்டும். தேர்வு மற்றும் சேவை கட்டணமாக ரூ.10-ஐ, தலைமை ஆசிரியர் மூலம் முதன்மை கல்விஅலுவலரிடம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஆக.16. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100பேருக்கு (50 மாணவர், 50 மாணவி)12ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.1000 கிடைக்கும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் படிப்போர், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது என தேர்வுத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.