உள்ளூர் செய்திகள்

இந்திய விமானப்படையில் தடம் பதிக்க ஏராளாமான வாய்ப்புகள்

ராணுவ வேலைகளுக்குப் போவதைப் பற்றிய பார்வையும் பொதுவாக நமது இளைஞர்களிடம் மாறி வருகிறது. ராணுவ வேலைகள் என்பவை அதிகபட்சமான திருப்தியைத் தருவதோடு மிக நல்ல எதிர்காலத்தையும் தனிப்பட்ட முறையில் நமக்குத் தருகின்றன. மேலும் குறைந்தது 21 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரியும் கட்டாயம் கூட தற்போது பல வேலைகளில் இல்லை. குறுகிய கால பணி வாய்ப்புகளாக இவை அமைவதால் அங்கு பணியாற்றி வந்தவுடன் முன்னாள் ராணுவத்தினர் என்கிற முறையில் மறு வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் சாத்தியமாக உள்ளது. ஏர்போர்ஸ் அகாடமி (சி.டி.எஸ்.,-யு.பி.எஸ்.சி.,)*வயது 19 முதல் 22க்குள் இருக்க வேண்டும்*பி.எஸ்சி.,யில் இயற்பியல் அல்லது வேதியியல் படித்திருக்க வேண்டும். அல்லது பி.இ., பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். என்.சி.சி. சிறப்பு நுழைவு (குறுகிய கால வாய்ப்பு)*வயது 19 முதல் 23க்குள் இருக்க வேண்டும்*பி.எஸ்சி இயற்பியல் அல்லது வேதியியல் முடித்திருப்பதுடன் என்.சி.சி.,யில் சி சான்றிதழ் பெற்றிருப்பதும் முக்கியம். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (எலக்ட்ரானிக்ஸ் பிரிவு)*வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்*எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேஷன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரிகல் போன்றவற்றில் ஒன்றில் பி.இ., முடித்திருக்க வேண்டும். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (மெக்கானிக்கல் பிரிவு)*வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்*ஏரோநாடிகல் அல்லது மெக்கானிக்கல் அல்லது புரடக்ஷன் பிரிவுகளில் ஒன்றில் பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். அட்மினிஸ்டிரேடிவ் லாஜிஸ்டிக்ஸ் அல்லது ஏர் டிராபிக் கன்ட்ரோலர் அல்லது பைட்டர் கன்ட்ரோலர்*வயது 20 முதல் 23க்குள் இருக்க வேண்டும்*பட்டப்படிப்பு முடித்திருப்போர் 60 சதவீதத்துடனும் பட்டமேற்படிப்பு முடித்திருப்போர் 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் பிரிவு பணிகள்*இதில் காமர்ஸ் பட்டதாரிகள் மற்றும் பட்டமேற்படிப்பு முடித்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*பி.காம். முடித்திருப்போர் 20-23க்குள்ளும் எம்.காம் முடித்திருப்போர் 20-25க்குள்ளும் வயது இருக்க வேண்டும். *பி.காம் முடித்தவர் 60 சதவீதத்துடனும் எம்.காம். முடித்தவர் 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். கல்விப்பிரிவு வாய்ப்புகள்*பி.ஏ அல்லது பி.எஸ்சி. டிபன்ஸ் ஸ்டடிஸ் 50 சதவீதத்துடனும் எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி. 50 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.*எம்பிஏ முடித்தவரும் (50 சதவீதம்) விண்ணப்பிக்கலாம். *வயது 21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் பெண்களுக்கான குறுகிய கால வாய்ப்புகள் பிளையிங் பிரிவு*இதற்கு திருமணமாகாத அல்லது விதவைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.*பி.எஸ்சி. இயற்பியல் அல்லது கணிதம் முடித்திருப்பது முக்கியம். பி.இ. படித்தவரும் விண்ணப்பிக்கலாம்.*வயது 19 முதல் 25க்குள் இருக்க வேண்டும். ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல்) பிரிவு*மேலே குறிப்பிட்டுள்ள பாடங்களில் பி.எஸ்சி. அல்லது பி.டெக். அல்லது எம்.எஸ்சி. அல்லது எம்.இ. முடித்தவர் விண்ணப்பிக்கலாம். *வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அட்மினிஸ்டிரேடிவ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் கிரவுண்ட் பணிப்பிரிவுகள்*பட்டப்படிப்பை 60 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். 20 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். *பட்ட மேற்படிப்பு முடித்தவர் 50 சதவீதத்துடன் தேர்ச்சி. வயது 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். *சட்டக் கல்வி 50 சதவீதம்-20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் பிரிவு (கிரவுண்ட் பணிப் பிரிவு):*பி.காம் அல்லது சி.ஏ. அல்லது எம்.காம். அல்லது ஐசிடபிள்யூ.*பட்டம் முடித்தவர் 20 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.*பிற படிப்பு முடித்தவர் 20 முதல் 25 வயது வரை இருக்கலாம். மெட்டீரியலாஜிகல் பிரிவு*எம்.எஸ்சி. இயற்பியல் அல்லது தட்பவெப்பம் அல்லது ஜியோபிசிக்ஸ் அல்லது ஓசனோகிராபி முடித்திருக்க வேண்டும். *20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்விப் பிரிவு (கிரவுண்ட் பணி)*எம்.ஏ. அல்லது எம்.எஸ்சி. 50 சதவீதம் பி.ஏ. அல்லது பி.எஸ்சி. 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.*21 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் முக்கியம். விமானப் படை பணி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை careerairforce.nic.in எனும் இணைய தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்