உள்ளூர் செய்திகள்

தமிழக மருத்துவ கல்வி இயக்குனராக விநாயகம் பொறுப்பேற்பு

சேலம்: தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக இருந்த தியாகவள்ளி கிருபாகரன், பிப்., மாதம் ஓய்வு பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரி டீன் கலாநிதிக்கு, தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. டாக்டர்கள் பணி மாற்றம், மருத்துவ உபகரணம், மருந்து கொள்முதலில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது கூறப்பட்டது. டாக்டர் கலாநிதிக்கு இயக்குனர் (பொறுப்பு) பதவி வழங்கியதை எதிர்த்து கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் தனபால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு செப்., 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக,  திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் விநாயகம் நியமிக்கப்பட்டார். இவர் 25ம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்